1-3 வார்டு உத்திரமேரூர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 5.7.2019 அன்று நியூட்டன் அறிவியல் மன்ற துவக்கவிழா இனிதே நடைபெற்றது. பள்ளித்தலைமையாசிரியர் திருமதி.சு.சந்தானலட்சுமி தலைமையில், அனைத்து ஆசிரியர்கள் மற்றும் முன்னிலையில் இவ்விழா சிறப்பாக நடந்தேறியது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பாலர்நேசன் நடுநிலைப்பள்ளி பட்டதாரி அறிவியல் ஆசிரியர் திரு. தே.சந்திரன் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த கருத்துக்களையும், அறிவியல் அறிஞர்களின் கதைகளையும் விளக்கி மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி சிறப்பு செய்தார். நியூட்டன் அறிவியல் மன்றத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்களை அனைத்து மாணவர்களின் ஓட்டெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டு பதவியேற்றுக்கொண்டனர். மாணவர்களின் அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்து கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கி மாணவர்களின் தனித்திறமையினை பாராட்டினர். விழாவினை பட்டதாரி அறிவியல் ஆசிரியர் நி.அன்பழகன் ஏற்பாடு செய்திருந்தார்.



Comments
Post a Comment