இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் சார் மன்றத்தின் செயல்பாடுகள்13.3.2020

 *இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் சார் மன்றத்தின்* சார்பாக 13.3.2020 *சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி* மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 1 முதல் 3 வார்டு உத்தரமேரூர் பள்ளி வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வீதி தோறும் மாணவர்கள் சென்று உற்சாகத்துடன் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் சுகமான வாழ்வு வாழ்வோம் என்று உரத்த குரலில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்யப்பட்டது.  இப்பேரணியினை பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரிய பெருமக்கள் துவக்கி வைத்து மாணவர்களுடன் வீதிகளுக்கு சென்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பிரச்சாரம் செய்தனர். இதன் தொடர்ச்சியாக சுற்றுச்சூழல் சார் மன்றத்தின் சார்பாக உணவு திருவிழா பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த உணவு திருவிழாவில் மாணவர்கள் குழுக்களாக பிரிந்து சத்து நிறைந்த உணவுப் பொருட்களையும், பாரம்பரிய உணவுகளையும்  அழகாக காட்சிப்படுத்தி அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கும் ஆசிரிய பெருமக்களுக்கும் வழங்கி சத்துக்களை பட்டியலிட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வையும் பொதுமக்களுக்கு காட்சியும் படுத்தினர்.

















இப்பேரணியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் திருமதி சாவித்திரி பள்ளி தலைமையாசிரியர் திருமதி.சந்தானலட்சுமி  திருமதி.கமலவல்லி திருமதி.அரங்கநாயகி திரு.ராஜன் திருமதி.லதா மற்றும் திருமதி.புஷ்பலதா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆலோசனையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அறிவுரையையும் வழங்கினார்கள். மேலும் சுற்றுச்சூழல் மன்றத்தின் செயல்பாடுகள் அனைத்தையும் ஒருங்கிணைப்பாளர் அறிவியல் ஆசிரியர் அன்பழகன் அவர்கள் சிறப்பாக ஒழுங்கமைப்பு செய்திருந்தார்.

Comments