இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் சார் மன்றத்தின் சார்பாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 1 முதல் 3 வார்டு உத்தரமேரூர் பள்ளி மாணவர்களுக்காக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சார்ந்த போட்டிகள் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி சந்தானலட்சுமி அவர்கள் தலைமையில் நடத்தப்பட்டன.பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டி ஓவியப்போட்டி என ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு போட்டியில் சிறப்பாக பங்கெடுத்த அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது
1. பேச்சுப்போட்டி
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நமது கடமை சூழல் காத்து சுகம் பெறுவோம்
2. கட்டுரைப்போட்டி
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
சுற்றுச் சூழல் காப்போம்
3. ஓவிய போட்டி
சுகம் தரும் சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் மன்ற போட்டிகளை வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் திருமதி சுமதி அவர்கள் நேரடியாக பார்வையிட்டு மாணவர்களுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் தெரிவித்தார்கள் மேலும் பேச்சுப் போட்டியில் நடுவராக பங்கேற்று சிறப்புச் செய்தார்கள் பள்ளி மேலாண்மை குழு தலைவர் திருமதி சாவித்திரி அவர்களும் பள்ளி ஆசிரியர்களும் சுற்றுச்சூழல் மன்ற போட்டிகளை நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களை தெரிவு செய்தார்கள்.






Comments
Post a Comment