Aeromodelling - Introduction Class 18/08/2022 Newton Science Club PUMS 1-3 Ward Uthiramerur, Kanchipuram District + Village Tech School +Robotics Foundation of Tamilnadu + Rotary Club Rainbow Chennai

 எங்கள் பள்ளி எங்கள் பெருமை 

அறிவியலில் தொழில் நுட்ப வளர்ச்சி  மாணவர்களின் கற்றலில் வளர்ச்சி 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் உத்திரமேரூர் 1-3 வார்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஏரோ மாடலிங் அறிமுக விழா நடைபெற்றது.  


இவ்விழாவிற்கு உத்திரமேரூர் வட்டாரக்கல்வி அலுவலர் திருமிகு. தண்டபாணி அவர்கள் தலைமையேற்று மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி தகவல் தொழில்நுட் வளர்ச்சியினை சரியான விதத்தில் பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் கற்றலை உறுதிசெய்துகொள்ளவேண்டும் என்று வாழ்த்துக்கள் தெரிவித்தார்.  

இச்சிறப்புமிகு நிகழ்வில்  இளம்விஞ்ஞானி திருமிகு பாலாஜி திரு அவர்கள் நிறுவனர் Village Tech School,Founder Robotic Foundation in TN கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஏரோ மாடல் அறிமுகப்படுத்தி மாணவர்களை குழுக்களாக பிரித்து அதற்குரிய பொருட்களைக்கொண்டு செய்விக்க கற்றுக்கொடுத்தார். மேலும் திருமிகு. பாலாஜி வரதன் அவர்கள் Village Tech School,CO-Founder Robotic Foundation in TN  மாதிரிகள் செய்வதற்கான விளக்கங்களை தெளிவாக மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் எடுத்துக்கூறினார்.  

காஞ்சிபுரம் களியாம்பூண்டி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன அறிவியல் விரைவுரையாளர் திரு, குருபிரசாத் அவர்கள் வருகை தந்து ஆலோசனைகள் மற்றும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள்













மேலும் வீட்டுக்கொரு விஞ்ஞானி திரு.வெங்கடேசன் அவர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தி ஏரோ மாடல் செய்திட வழிவகை செய்தனர். 

மாணவர்களை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் அனைத்து மாணவர்களுக்கும் வண்ணமிகு சான்றிதழ் வழங்கி மாணவர்களின் திறனை மேம்படுத்தினார் திருமிகு. தினேஷ்குமார் அவர்கள்  ரோட்டரி சங்கம் ரெயின்போ சென்னை.  

மேலும் சென்னையில் 8ம்வகுப்பு பயின்றுவரும் செல்வன் தீபக் அவர்களின் ரோபாட்டிக் மாடல் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. 

நியூட்டன் அறிவியல் மன்ற மாணவர்கள் 40க்கும் மேற்பட்ட தங்களின் அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தி சிறப்பு அழைப்பாளர்களை அறிவியல்உலகிற்கு அழைத்துச்சென்றனர். 











































பள்ளி மாணவர்களின் சிலம்பம் மற்றும் அவர்களின்  RC CAR செயல்பாடு அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது. 

முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் திருமதி.சு,சந்தானலட்சுமி வரவேற்றார். பட்டதாரி அறிவியல் ஆசிரியர் நி. அன்பழகன் நன்றி கூறினார். 

Comments