*அரசுப் பள்ளியில் உணவுத் திருவிழா* ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 1-3வார்டு உத்திரமேரூர் பள்ளியில் உணவின் அவசியத்தையும், உணவே மருந்து , சத்தான உணவை உண்போம் என்பதனை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் உணவுத்திருவிழா நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் *முனைவர் பாலசுப்பிரமணியம்* அவர்கள், உத்திரமேரூர் வட்டார கல்வி அலுவலர் *திரு. தண்டபாணி* அவர்கள், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் *திரு. ராஜேஷ்* அவர்கள், வானவில் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் பெற்றோர்கள்,ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் 5 தலைப்புகளின் கீழ் மாணவர்கள் உணவுத்திருவிழா நடத்தினர். *ஆவியில் வேக வைத்தது, இயற்கையான உணவு, தாகத்தை தணிக்கும் உணவுப் பொருள்கள், பொரித்த உணவு, திரவ உணவு*
மாணவர்கள் நேர்த்தியாக உணவுகளை காட்சிப்படுத்தினர்.
சத்தான உணவினை பள்ளி மாணவர்கள் அனைவரும் எடுத்துக் கொண்டனர்.
தலைமை ஆசிரியர் *சு.சந்தானலட்சுமி* அவர்களின் தலைமையில் பட்டதாரி அறிவியல் ஆசிரியர் *N.அன்பழகன்* அவர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
விழாவில் மாணவர்களின் உடைய *வில்லுப்பாட்டு* நிகழ்வு நடைபெற்றது.







































































































































Comments
Post a Comment