ரோபோட்டிக் பயிற்சி துவக்கவிழா - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 1-3 வார்டு உத்திரமேரூர்

     மாணவர்களின் பன்முகத்திறன் வளர்க்கும் நோக்கில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 1-3 வார்டு உத்திரமேரூர் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினை கற்பிக்கும் விதத்தில் ரோபோட்டிக் பயிற்சியின் துவக்க விழா 20.06.2019 அன்று சிறப்பாக நடைபெற்றது. உத்திரமேரூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள், பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் துவக்கி வைத்து மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்கள்.
இப்பயிற்சியானது ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் உள்ள ஆசிரியர் வழங்க உள்ளனர் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். காஞ்சி டிஜிட்டல் டீமின் ஆசிரியர்களுக்கு நன்றி.



Comments